திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டம்

மதுரை அருகே திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில், பள்ளி மாணவர்கள் பஸ்ஸை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வேடர் புளியங்குளம், சாக்கிலிபட்டி போன்ற கிராமங்களுக்கு பேருந்துகள் சரியாக வருவதில்லையாம். எனவும், மேலும், மாணவர்களை ஏற்றாமல் புறகணித்து செல்வதாகவும், மாணவர்கள் பேருந்தினை நிறுத்தி மறியல் செய்தனர்.

இதனால், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும், திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தினர், மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மறியலை கைவிட செய்தனர்.

scroll to top