மதுரை அருகே தனக்கன் குளத்திலிருந்து மதுரை மாநகர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்தகொண்டிருந்தவர் சம்பகுளத்தைச் சேர்ந்த கார்த்திகை குமார்-(45). இவர், தனது டூவிலரில் மதுரை திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் செல்லும் பைபாஸ் சாலையில் மதியம் வந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடை முன்பு வைக்கப்பட்டுள்ள காவல்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது வேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108 க்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து., மதுரை போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து விபத்து குறித்து கேட்டறிந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் டூவிலரில் வந்த கார்த்திகை குமார் மது அருந்தி இருக்கலாம் என்றும், மதுபோதையில் வாகனத்தை வேகமாக இயக்கி விபத்து நடந்திருக்கலாம் என கூறினர்.
படுகாயம் அடைந்த கார்த்திகை குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ஏற்பட்ட டூவீலர் விபத்தின் சிசிடிவி காட்சிகள் எதிரே இருந்த அரசு மதுபான கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த விபத்தினுடைய சிசிடிவி, காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.