திருப்பரங்குன்றம் அருகே தனியார் மண்டபத்தில் நக்கீரர் தமிழ் சங்க மாநாடு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்
குன்றத்தில் நக்கீரர் தமிழ்ச் சங்கமாநாடு நடைபெற்றது. விழாவில், நக்கீரர் தமிழ்ச் சங்க தலைவர் முத்து தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பாஸ்கரன் வரவேற்புரை கூறினார்.
டெல்லி அகில இந்திய தமிழ் சங்க தலைவர் முகுந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் ,சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டார்.விழாவில் பேசிய ஆதினம் கூறியதாவது: தமிழ் தொன்மையான மொழி பழமையான மொழி அவற்றின் தன்மை புரியாமல் மம்மி டாடி என்று கூறுகின்றனர். மம்மி என்பதற்கு இறந்தது என்று பொருள் ஆனால், அதை பேசும் குழந்தையை கட்டியணைத்து மகிழ்கின்றனர் .எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உள்ளது. கண்ணகி பாண்டிய மன்னனை எதிர்த்து தேரா மன்னா என்று கூறியதை நினைவு கூறவேண்டும்.
வந்திருப்பது தெய்வம் என்று தெரிந்தும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கூறிய நக்கீரர் வாழ்ந்த தமிழ் மண் இது.ஆகையால், தமிழைப் போற்றி தமிழை வளர்க்க வேண்டும் ஆங்கிலேயன் போய்விட்டாலும், ஆங்கிலத்தை நாம் விடமுடியவில்லை ஆங்கில சம்பிரதாயங்களை நாம் கடைபிடித்து வருகிறோம்.ஆகையால், நாம் தமிழ் மொழியை வளர்க்க பாடுபட வேண்டும்.அவ்வையார் போல் தமிழ்மொழியை யாரும் வளர்க்க வில்லை.
ஆத்தி சூடி.கொன்றை வேந்தன் நாலடியார்,திருவாசகம் போன்றவை பற்றி தெரியவில்லை.
திருக்குறளை பற்றி தெரியவில்லை எனக் கூறினார்.பின்னர்,செய்தியாளார்களிடம்
பேசிய ஆதினம்உயர் நீதிமன்றம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியதற்கு,நான் எழுந்து நிற்பேன் என கூறினார்.
மாநாடு, கூறித்த கேள்விக்குமாநாடு சிறப்பாக நடைபெற்றது.தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ் பாட நூல்களில் ஆசாரக்கோவை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கொன்றைவேந்தன், திருவாசகம், தொல்காப்பியம், பெரியபுராணம் நீதி நெறி விளக்கம் போன்ற தமிழ் நூல்கள் பயிற்று
மொழிக்க படவேண்டும்.தமிழ் கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என நிலவ வேண்டும் என மதுரை ஆதீனம் ஞான தேசிக பரமாச்சாரியார் கூறினார்.

scroll to top