திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பெரியசாமி நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ள நீர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் .
அவனியாபுரம் புது குளம் கண்மாய் நிரம்பியது.
கண்மாய் நீர் பெரியசாமி நகர் பகுதியில் மழை நீர் வெள்ள நீராக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால், இப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

scroll to top