திருப்பரங்குன்றத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த தினம்

திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் எம்ஜிஆர் பிறந்த தினத்தை, முன்னிட்டு அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கொரோனா வழிமுறைகளை பின்பற்றாமல், சமூக இடைவெளியின்றி அன்னதானம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி, எம். எல். ஏ.  ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர். பின்னர், சமூக இடைவெளி இன்றி கொரோனா தொற்று பரவும் வகையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியால் பெரிய ரத  பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

scroll to top