திருச்சுழி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம்

Pi7_Image_WhatsAppImage2022-08-16at3.09.38PM.jpeg

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ளது கள்ளக்காரி கிராமம். கள்ளக்காரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமொட்டை இருளப்பசாமி கோவிலின் பொங்கல் திருவிழா மற்றும் 37ம் ஆண்டு குருபூஜை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாட்டு வண்டி பந்தயம் போட்டி நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தயத்தில் விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்காரி பகுதியில் இருந்து கீழ்க்குடி வழியாக, துத்தநத்தம் பகுதி வரை என போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும், 2ம் பரிசாக 35 ஆயிரம் ரூபாயும், 3ம் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும் மற்றும் பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட்டன. மாட்டு வண்டி பந்தையத்தை முன்னிட்டு திருச்சுழி பகுதியில், திருச்சுழி காவல்நிலைய ஆய்வாளர் விஜயகாண்டீபன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

scroll to top