திருச்சுழியில் நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

திருச்சுழியில், நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. சென்னை ஸ்டெடிபிரீஸ் சென்டர் சார்பாக திருச்சுழி கிளை நூலகத்தில் நீட் தேர்வு இலவச பயிற்சி முகாம் துவங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் அழகேசன் வரவேற்றார் .
திருச்சுழி வைத்தியலிங்கநாடார் பள்ளி நிர்வாக பெரியண்ணன் ராஜன் பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில், தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியர் செல்லப்பாண்டியன் அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர் நாகநாதன், ஸ்டெடிபிரீஸ் சென்டர் இயக்குனர் சுதந்திரபாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர் . கிளை நூலகர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

scroll to top