திருச்சுழியில் குழந்தைகள் தின விழா

IMG-20211116-WA0023.jpg

விருதுநகர் மாவட்டம்  திருச்சுழி ஸ்பீச் மற்றும் சில்ட்ரன் பிலிவ் நிறுவனம் சார்பாக, திருச்சுழி நரிக்குடி ஒன்றியத்தில் உள் 34 கிராமங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், 1250 குழந்தைகள் கலந்து கொண்டனர்.    நிகழ்ச்சியில், குழந்தைகள் தங்களது குழந்தைப்பருவ மகிழ்ச்சியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், குழந்தைகள் அனைவரும் கல்வி கற்பதை உறுதி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஸ்பீச் திட்ட இயக்குனர் அமுதன், நிதி இயக்குனர் செல்வம், மக்கள் தொடர்பு அலுவலர் பிச்சை ஆகியோர் செய்தனர். ஸ்பீச் களப்பணியாளர்கள் குழந்தைகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினர்.

scroll to top