திராவிட கருத்துகளை நிலைநிறுத்தவே ஆட்சியில் உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னையில் விசி.க. தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் பேசியதாவது: திராவிட மாடல் முழக்கம் தொடர்ந்து ஒலிக்கும் என உறுதியளிக்கிறேன். திராவிட கருத்துகளை நிலைநிறுத்தத்தான் திமுக ஆட்சியில் உள்ளோம். எந்த சூழலிலும் திமுகவின் கொள்கைகளை நான் விட்டுத் தரமாட்டேன். தேர்தல் வரும் போகும் ஆனால் இயக்கங்களும் , கொள்கைகளும் இருக்கும். பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்து கொள்ளாது; டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல. கலைஞர் பிள்ளை நான். மத்திய அரசு – மாநில அரசு உறவு மட்டுமே இங்கே உள்ளது. திமுகவுக்கும் பாஜகவும் எந்த உறவும் இல்லை. இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் திராவிட கருத்தியல்களை நிறைவேற்றத்தான்.

scroll to top