திராவிட இயக்கங்கள் மட்டுமே தமிழ்நாட்டை ஆளும்: அதிமுக

samayam-tamil-2.jpg

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.  கேள்வி நேரத்தின்போது, அதிமுக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் பேசினார்.

அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறியவர், அமித்ஷாவின் பேச்சு, இருமொழிக் கொள்கை குறித்தும் பேசியவர்,   ‘தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும், வேறு எவராலும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று தெரிவித்தார்.  செங்கோட்டையனின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தர். இன்றைய பேரவை விவாதத்தில், செங்கோட்டையனின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், பாஜகவின் கூட்டணிக்கு எதிராகவும் பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறிவரும் தேசிய கட்சிகளின் கனவுகளுக்கும் தடை போட்டுள்ளது.

scroll to top