விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில், 1.5 லட்சம் மதிப்பீட்டில் 25 குடும்பத்தினர்களுக்கு தலா 4000 ரூபாயும் அரிசி, வேஷ்டி ,சேலை போர்வை மற்றும் பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர், சென்னை முதல் குமரி வரை மழையினால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை
தமிழக முதல்வர் சிறப்பான முறையில் செய்துவருகிறார்.
அவர்வழியில் இராஜபாளையம் தொகுதியில் மழையினால் வீடு இழந்த அனைவருக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வீடுகட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், வாடகை வீட்டில் இருந்து வீடு இழந்தவர்களுக்கு சம்மந்தபுரம் வருவாய் கிராம பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும். அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்துதரப்படும் எனக்கூறினார்.
இந் நிகழ்வில், வட்டாட்சியர் ராமச்சந்திரன் நகர செயலாளர் இராமமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் , மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.