திமுக – காங்கிரஸ் கட்சிக்கு மதுரையில் 9 வார்டுகளும், திருப்பூரில் 5 வார்டுகளும் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சியில்  5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல மதுரையில் 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் முதற்கட்ட தகவலில், மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 9 வார்டுகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 5 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் , பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் இன்னும் இறுதியாகாத நிலை உள்ளது.

scroll to top