திமுகவுடன் மய்யம் கூட்டணியா?: கோவையில் கமல்ஹாசன் போட்டி; கலங்கி நிற்கும் கட்சிகள்

Pi7_Image_annamalai-1copy.jpg

THE KOVAI HERALD:

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமாம். அதுபோலத்தான் கமல்ஹாசன் 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி என்று சூசகமாக அறிவிப்பு செய்தாலும் செய்தார். கோவை திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஏன் எதற்கு எப்படி என்று சடசடவென்று கேள்வி எழும்புகிறது இல்லையா? முதலில் கமல்ஹாசன் தரப்பில் நடந்தது என்ன என்று பார்ப்போம்.
அரசியலுக்கு கமல் வருகை
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மீது பல்வேறு தரப்பில் இருந்தும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அப்போது வைக்கப் பட்ட விமர்சனங்களில் நடிகர் கமல்ஹா சன் ட்விட்டர் மூலமாக வைத்த விமர்சனங்கள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவினர் உடனான கமல்ஹாசனின் மோதல், அவரது அரசியல் வருகையையும் உறுதிபடுத்தியது. இதனைத் தொடர்ந் து 2018ம் ஆண்டு மதுரையில் பிரம்மா ண்டமாக மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். திமுக, அதிமுக வுக்கு மாற்று என்று கமல்ஹாசன் மக் கள் நீதி மய்யத்தை முன்னிலைப்படுத் தினார்.தொடர்ந்து 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், எந்த தொகுதியிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. இருந்தும் பல்வேறு தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்ததால், சட்ட மன்றத் தேர்தலில் ஆர்வமாக அக்கட்சி வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். இந்த முறை நடிகர் கமல்ஹாசனும் நேரடியாக தேர்தல் களமிறங்கினார். கோவை தெற்கு சட்டமன்றத்தொகுதிக்குள் அவர் போட்டியிட்டார்.இருப்பினும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. முக்கியமாக வெற்றிக்குப் பக்கத்தில் இருந்த கமல்ஹாசனை குறைந்த ஓட்டு கள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். அதிமுக அசுர பலத்துடன் இருந்தும் கூட அந்தக் கட்சியின் கூட்டணியில் போட்டியிட்டும் கூட வானதி கடைசி வரை இழுபறியாகவே இருந்து வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில் கோவை மண்டலத்தில் கமலஹாசனுக்காக பணியாற்றிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகி டாக்டர் மகேந்திரன் கமலின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை எனக் கூறி அவர் கட்சியிலிருந்துவிலகி திமுகவில் சேர்ந்தார். இதன் பின்ன ணியில் முக்கிய நிர்வாகிகள் பதவியில் இருந்து விலகியதோடு, மாற்றுக் கட்சிக்கும் தாவினர். இதனால் கமல்ஹாசன் மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்ட தொடங்கினார். ஆனாலும் தன் கோவை தெற்குத் தொகுதியை அவர் விடவில்லை. எந்தப் பிரச்சனையென்றாலும் இங் கே வருவதும் தொகுதி மக்களை சந்திப்பதையும் கமல் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் தோ ற்ற இடத்தில் நின்று வென்று காட்டுவது என்ற சினிமா ஃபார்முலாவை கமல் அரசியலிலும் கையில் எடுத்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் பேச ஆரம்பித்தனர்.
திமுக உடன் கூட்டணியா?
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மநீம கட்சி பணிகளை மீண்டும் வேகமாக செய்ய ஆரம்பித்துள்ளார் கமல். இதற்காக சென்னை அண்ணாந கரில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் சில நாட்கள் முன்பு தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றிய விவாதிக்கப்பட்டது. அதேபொல் கட்சி நிர்வாகிகளுக்காக பயிற்சி பட்டறையும் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத் தாலும் தேர்தல் பணிகளை தீவிர மாக செய்ய வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதித்தோம். அதேபோல் கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியதாக தெரி வித்தார்.
இப்படி கமல் பேசியதன் மூலம் அவர் அடுத்த மக்களவைத் தேர்தலில் கூட்டணிக்குத் தயாராகி விட்டார் என்றே அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. அதையொட்டியே மீடியாக்களில் செய்திகள் பரவாலாகி ன்றன. கமல் கடவுள் மறுப்புக் கொள்கையில் ஆரம்பித்து சகல விஷயங்களிலும் திமுகவுடன் இணக் கமாகச் செல்கிறார். குறிப்பாக கடந்த சட்டமன்றத்தேர்தலில் தான் தோல்வி யடைந்தாலும் முதல் ஆளாக சென்று முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது இருந்து இப்போது வரை திமுக அரசை பெரிதாக விமர்சனம் செய்யாமல் ஒரு மென் மையான போக்கையே கடைப்பிடித்து வருகிறார். பல விஷயங்களில் பாஜகவிற்கும், முந்தைய ஆளும் அதிமுகவிற்கும் கமலுக்கும் கடும் மோதல் வந்திருக்கிறது.
எனவே அவர் பாஜகவிலோ, அதிமுக கூட்டணியிலோ சேருவதற்கு வாய் ப்பே இல்லை வரும் தேர்தலுக்கு ஸ்டாலினுடன் பேசி விட்டார். ஏற்கன வே மக்களவைத் தேர்தலுக்கு தொகுதி வாரியாகத் தயாராகும்படி கட்சி உடன்பிறப்புகளுக்கு உத்திரவி ட்டுள்ள நிலையில், தொகுதி வாரியாக பூத் கமிட்டி முதற்கொண்டு தூசி தட்டி வருகின்றனர் திமுகவினர். அதேபோல் கோவை மக்களவைத் தொகுதிக்கும் நான் தான் வேட்பாளர் என்ற கோதாவில் திமுக விஐபிகள் பலர் தயாராகி வருகின்றனர். அதையும் தாண்டி காங்கிரஸ் கூட்டணி வரிசையில் கோவை தொகுதி தனக்குத்தான் என கச்சை கட்டிக் கொ ண்டிருக்கிறது. இப்போது கமலும் வந்தால் நம் நிலை மை என்ன ஆகும் என்ற வருத்தத்தில் பல தலைகளும் பேசிக் கொள்வதைக் காண முடிகிறது.
களத்தில் பாஜக
அதை விடக் கொடுமை பாஜக சைடில் தான் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது அதாவது கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏவான வானதி வரும் மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் சீட் வாங்கி போட்டியிட திட்டமிட்டுள்ளார். அப்படி மட்டும் ஆனால் அடுத்து பாஜக ஆட்சி அமையும்போது நான்தான் மந்திரி என்றும் கட்சிக்காரர்களிடமே பேசி வருகிறார். அதற்கு முழுமையான சப்போர்ட் அதிமுகவிடம் வேண்டி அவர்களுடன் ரொம்ப நெருக்கமாக இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் முன்னாள் பாஜக கோவை எம்பி சி.பி.ராதாகிருஷ்ணனும் தன் முயற்சியை விடுவதில்லை. ராபர்ட் புருஷூ போல போட்டியிட்டு வென்றே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். அவரின் அந்த உத்வேகத்தை சமீபத் தில் நிகழ்ந்த கோட்டைமேடு கார் குண்டு சம்பவத்தின் பேட்டியின் போ தே காண முடிந்தது. அதுபோல் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகான ந்தமும் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியும் களத்தில் உள்ள னர்அவர்களையும் தாண்டி ரொம்பவும் பாடாய்பட்டுக் கொண்டிருப்பவர் பாஜக தமிழகத்தலைவர் அண்ணாமலை. அவர் அரசியல் கனவு நனவு எல்லாமே கோவை மக்களவைத் தொகுதியில்தான். இவர் கடந்த ஐந்தாண்டுகளாக கோவையில் நம்பர் ஒன் அரசியல் ஹீரோவாக இருந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் அதிமுகவிலும் சிலர் எம்பி ரேசுக்கு குறி வைக்கின்றனர். அது எல்லாம் நடக்குமா என்பதை விட ரொம்பக் கவலையோடு இருப்பவர்கள் திமுகவினர்தான். கோவையில் ஒரு எம்.எல்.ஏ கூட திமுகவிற்குக் கிடை யாது. எம்.பி ஒருவர் வந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில அமைந் தால் நமக்கு சுலபமாக மத்திய மந்திரி வாய்ப்பக் கிடைக்கும் என்பது ஒரு சில திமுக விவிஐபியின் கணக்கு. எது எப்படியிருந்தாலும் கமல்ஹாசன் திமுகவுடனோ, வேறு அணியுடனோ கூட்டணி சேரும் பட்சத்தில், கோவை தொகுதியில் அவரே நேரடியாகப் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் பாடு திண்டாட்டம்தான். போன முறை கடைசி வரை வானதி பட்டபாடு அவருக்கு மட்டும் அல்ல, அவருடன் இருந்தவர்களுக்கும் தெரியும் என்று கண்சிமிட்டுகிறார்கள் கோவை பாஜக வினர் சிலர். அதை அதிமுகவினரும் ஆமோதிக்கவே செய்கிறார்கள். தேர்தலுக்கு இன்னமு ம் ஒரு வருடம் நான்கு மாதங்கள் உள்ளது. அதற்குள் நமக்கு என்ன அவசரம். அப்போது என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.

S.KAMALA KANNAN Ph.92443 17182

scroll to top