திமுகவின் 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்று இந்த வெற்றி – முதல்வர் பெருமிதம்

​நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி திமுகவின் 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்று என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதைல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றி குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த வெற்றி திமுகவின் 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்று தான். இந்த மகத்தான வெற்றியை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு அளித்ததற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கொங்கு மண்டலத்தையே கைப்பற்றி உள்ளோம். மேலும், இந்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்குத் தரப்பட்ட ஒதுக்கீட்டால் சமூகத்தில் சரிபாதி பெண்கள் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர்.  இதுவே திராவிட புரட்சி ஆகும்.” என்று கூறினார்.

scroll to top