திமுகவினரின் சொத்துப் பட்டியல்: விவாதப் பொருளாக மாறியுள்ளது – வானதி சீனிவாசன்

vanathi-image.jpg

திமுகவினரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக திமுகவினா் நீதிமன்றத்தை நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறினாா்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோயில்களின் மேம்பாட்டுக்காக ஆலயம் என்ற புதிய திட்டத்தை வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.
கோவை, காந்திபுரம் சித்தாபுதூா் பகுதியில் உள்ள மதுரை வீரன் கோயிலில் இத்திட்டத்தை தொடங்கிவைத்த அவா் முதற்கட்டமாக சுமாா் 20 கோயில்களுக்கு தலா 5 லிட்டா் தீப எண்ணெயை வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட அனைத்து கோயில் களுக்கும் மாதம் ஐந்து லிட்டா் தீப எண்ணெய் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதே போல தொகுதியிலுள்ள 20 கோயில்களுக்கு மாதந்தோறும் தீப எண்ணெய் வழங்குவது மட்டுமல்லாமல், கோயில் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்வது என தீா்மானித்துள்ளோம்.
கோயில்களில் பூ கட் டும் பெண்களுக்கு அர சின் திட்டங்களைப் பெற் றுத் தரும் பணிகள் மேற்கொள்ளப்படும். பெரும்பாலான இடங்களில் கோயில்களுக்கு வருவாய் இல்லாத நிலையில், பூஜை முறைகளிலிருந்து விலகிச் செல்வதால் அவா் ளுக்கு உதவும் வகையில் ஆலயம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எந்தச் சூழலிலும் கோயில்களில் விளக்கு எரியாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவே இப்பணியை தொடங்கி யுள்ளோம். எதிா்காலத்தில் இந்த திட்டம் மேலும் விரிவு படுத்தப்படும்.
பாஜக மாநில தலைவா் அண்ணாமலை வெளி யிட்டுள்ள திமுகவினரின் சொத்துப் பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்பாக விவாதப் பொருளாக மாறியுள்ளது. திமுகவினா் நீதிமன்றத்தை நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது என்றாா்.
தொடர்ந்து அண்ணாமலை யின் ரஃபேல் வாட்ச் பில் தொடர்பான கேள்விக்கு, பில் கேட்டீர்கள் பில் வந்ததா? இல்லையா? பில் கேட்டீர்கள், பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா? என பதிலளித்தார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top