சமூகநீதி போராட்டம் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதமாக உயர்த்தியது திமுகதான் என்றும் அனைத்து சமூகங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியே சமூகநீதி எனறும் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து பேசிய அவர், ‘ அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு அளித்ததுடன் மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு மற்றும் 107 சாதிகளை ஒருங்கிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கியதும் திமுகதான்’ எனக் குறிப்பிட்டார். இந்த இணையக் கருத்தரங்கில் ஆந்திரம், மகாராஷ்டிரம் அமைச்சர்கள் பிகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஷ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.