திண்டுக்கல்லில் மழைநீர் சேகரிப்பு குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

WhatsApp-Image-2023-05-08-at-13.15.02.jpg

திண்டுக்கல்லில், நத்தம் சாலையில், பர்மா காலனி அருகே மழைநீர் சேமிப்பு குளம் உள்ளது. அந்த குளத்தில் கெண்டை, கட்லா உள்ளிட்ட மீன்கள் வளர்க்கப்படுகின்றன. ஆனால், கடந்த 3 நாட்களாக குளத்தில் உள்ள மீன்கள் ஒவ்வொன்றாக செத்து மிதக்கின்றன. இவ்வாறு இறந்த ஏராளமான மீன்கள், குளத்தின் கரையை ஓட்டி ஒதுங்கி மிதக்கின்றன.

மீன்கள் அழுகி விட்டதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குளத்தின் அருகே உள்ள பர்மா காலனி, ரெத்தினம்நகர் குடியிருப்புகளை சேர்ந்த மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

scroll to top