திண்டுக்கல்லில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

WhatsApp-Image-2023-05-20-at-6.39.03-PM.jpeg

ரூ. 2 ஆயிரம் நோட்டை பண மதிப்பிழப்பை மத்திய அரசு செய்ததைக் கண்டித்து , திண்டுக்கல்லில் காங்கிரஸார் நூதனப் போராட்டத்தை நடத்தினர்.

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது. மேலும் , வங்கிகள் பொதுமக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, தலைவர் மணிகண்டன் தலைமையில் மணிக்கூண்டு பகுதியில் , 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாடை கட்டி அதில், 2000 ரூபாய் கட்டுகளை போட்டு அதற்கு மாலையிட்டு சங்கு ஊதி பெரியோர்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. நடைபெற்ற இந்த நூதனப் போராட்டத்தை, பொதுமக்கள் பலர் வேடிக்கையாக பார்த்து சென்றனர்.

scroll to top