தாராபட்டி கிராமத்தில் காமாட்சி அம்மன் பெட்டி எடுப்பு திருவிழா

WhatsApp-Image-2023-05-25-at-14.14.20.jpg

சோழவந்தான் அருகே தாராபட்டி கிராமத்தில் காமாட்சி அம்மன் பெட்டி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே தாராப்பட்டி கிராமத்தில்.பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் பெட்டி எடுப்பு திருவிழா நடைபெற்றது வைகை ஆற்றில் இருந்து காமாட்சி அம்மனின் அலங்கரிக்கப்பட்ட பெட்டிகளை அதிர்வேட்டுகள் முழங்க பூஜைகள் செய்து பரிவார தெய்வங்கள் முன்செல்ல ஊர்வலமாக வந்தனர் வழிநெடுகிலும் பக்தர்கள் மஞ்சள் நீரை பாதத்தில் ஊற்றி நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்துபெட்டியினை இறக்கி வைக்கப்பட்ட பின்பு சக்திகடா வெட்டப்பட்டது. இதில் தாராபட்டி மேலக்கால் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆ.கொக்குளம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

scroll to top