தாய்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் கோவை மாநகராட்சி ஊழியர் பங்கேற்று சாதனை
பாங்காங் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், பாராபவுலிங் விளையாட்டு போட்டிகளில் கோவை மாநகராட்சி ஊழியர் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
பாங்காக் நாட்டில் சர்வதேச பாரா பவுலிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நவம்பர் 28ம் தேதி தொடங்கி டிசம்பர் 3-ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா சார்பில் 12 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் மதுரையை சேர்ந்த ஒருவரும் கோவை மாநகராட்சி (கிழக்கு மண்டலம்) ஊழியர் கண்ணியப்பன் ஆறுமுகமும் பங்கேற்றனர்.
இதுகுறித்து கண்ணியப்பன் ஆறுமுகம் கூறுகையில்,பாங்காக்கில் நடந்த போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பி9-பிரிவில் தனிநபர் மற்றும் இரட்டையர்கள் பிரிவில் பங்கேற்றேன். இப்போட்டிகளில் 13-ம் இடம் பிடித்தேன். எதிர்வரும் காலங்களில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று மேலும் சாதனை படைக்க தொடர்ந்து முயற்ச்சி மேற்கொள்வேன். இதற்காக சென்னை, பெங்களூரு நகரங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன். என்றார்.