இந்திய அரசால் ஆண்டுதோறும் இந்திய திரைப்படத்துறையின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும்.
இந்த விருதானது இந்திய திரைப்படத் துறையின் தந்தை என கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டாக 1969ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு
வருகிறது.அன்றிலிருந்து வருடாவருடம் திரைப் பிரபலங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த விருதை சிவாஜி கணேசன் அவர்கள் 1996 ஆம் ஆண்டு பெற்றார். அவருக்குப்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 2019 ஆம் ஆண்டு தாதா சாகிப் பால்கே விருதை பெற்றார்.பிறகு தற்போது இரண்டாவது முறையாக கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதை மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்று உள்ளார். இந்த விருது குறித்து அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
அதன்படி நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது மற்றும் நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.