தரையில் அமர்ந்து படித்த வெள்ளலூர் இடையர்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்டீல் பெஞ்சு மற்றும் டெஸ்க் வழங்கல்

Pi7_Image_IMG-20220808-WA0079.jpg

கோவை வெள்ளலூர் இடையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவியர் டெஸ்க் மற்றும் பெஞ்ச் இல்லாத காரணத்தால் தரையில் அமர்ந்து படிக்கும் அவல நிலை காணப்பட்டது.கோவை மாவட்ட நாடார் பேரவையின் சார்பாக மாவட்ட தலைவர் கல்வித்தந்தை ஜி.காளியப்பன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆர். எஸ். கணேசன்,  மாவட்ட பொருளாளர் ஏ. தங்க மாயாண்டி உள்ளிட்டோர் முன்னிலையில் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் எட்டு ஸ்டீல் டெஸ்க் மற்றும் எட்டு பெஞ்ச் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலம், பேரூராட்சி துணைத் தலைவர் கணேசன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், சந்திரகுமார், கருணாகரன், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மருதாசலம், ஜெகநாதன், தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

scroll to top