தம்பதியை மிரட்டி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்

மதுரை பைபாஸ் சாலை உள்ள அருள் நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி கனகராஜ் – தங்கமாரி.
இவர்கள், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள குட்செட் தெரு பகுதியில் டீக்கடை நடத்த ஞானகுரு என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் வரை அட்வான்ட்ஸ் கொடுத்து, அவரிடமிருந்து கடையை வாடகைக்கு பெற்றுள்ளதாகவும்,
ஆனால், அந்த கடையின் மூலம் போதிய வருமானம் இல்லாததால், தம்பதியினர் கடையை காலி
செய்வதாகவும், எனவே, ஞானகுருவிடம் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர் என, சொல்லப்படுகிறது.இந்தநிலையில், ஞானகுரு, கனகராஜிடம் சில தினங்களாக பண தருவதாக கூறி அலைகளித்து வந்துள்ளார்.
அதனையடுத்து, தம்பதியினரை வீட்டுக்கு வந்து பணம் பெற்று கொள்ளுமாறு கூறியதும், அங்கு சென்ற தம்பதியிடம் பணத்தை தந்துவிட்டு ஆதாரமாக செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்ட பின்னர், ஞான
குருவுடன் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தம்பதியினரை மிரட்டி பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

scroll to top