தமிழ் மொழி அழகான மொழி, நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.! ஆனால் அது கடினம். என ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி தனது ஆசையை தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத ஒற்றுமை யாத்திரையை 7ந்தேதி தொடங்கினார். இன்று 3ஆம் நாளாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன், ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், கூட்டணி கட்சி களின் தொடர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
“தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்” ராகுல் காந்தி
