இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கூல் எட்டெக் யுனிகார்ன் நிறுவனம் ஆன LEAD, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் கற்றலில் மாற்றத்தை கொண்டு வந்து, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. LEAD-ன் NEP அடிப்படையிலான இன்டகிரேட்டட் ஸ்கூல் சிஸ்டமானது, அதன் சர்வதேச தரத்திலான பாடத்திட்டம், மல்டி-மாடல் கற்பித்தல்-கற்றல் முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படும் தீர்வுகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் பாடங்களை ஆழமான புரிந்து கொண்டு, அதிக மதிப்பெண் பெறுவதை உறுதி செய்கின்றன. தற்போது, LEAD-ன் இன்டகிரேட்டட் ஸ்கூல் எட்டெக் சிஸ்டம், தமிழகம் முழுவதும் 400 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் மாநிலத்தில் 1,60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும், 3800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் LEAD மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, LEAD நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுமீத் மேத்தா, பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் குழும பள்ளிகளின் செயலாளர் அங்கயற்கண்ணி, ஈரோடு, லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் இறையன்பு, ஈரோடு, லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கோமதி, பெரம்பலூர், கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கஸ்தூரி, பெரம்பலூர், கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பவித்ரா ஸ்ரீயின் தாயார் சுகன்யா, ஈரோடு, லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஜாவின் தாயார் பிரியா LEAD நிறுவனம் குறித்து விவரித்தனர்.
இன்று உலகளவில், மாணவர்களை நிபுணராக்கும் உத்தரவாதத்தை வழங்கும் சில எட்டெக் நிறுவனங்களில் LEAD ஒன்றாகும்.