மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கண்மணி, பால் நிறுவனத்தின் கண்ணாடி பாட்டிலில் கியூ .ஆர். கோடுடன் பால் அறிமுக விழா மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் கியூ. ஆர். கோடுடன் கூடிய பாலை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கண்மணி பால் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மணிகண்டன் கூறுகையில், ” கண்மணி பால் நிறுவனம் தொடர்ந்து மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பாலை வழங்கி வருகிறது. இந்நிலையில், புது வித முயற்சியாக உழவர் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பாலை பெற்று தரமான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக கண்ணாடி பாட்டிலில் அரை லிட்டர் ,ஒரு லிட்டர் என்று ,க்யூ ஆர் கோடு உடன் பாலை தயார் செய்திருக்கிறோம். இதன் மூலம் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
க்யூ ஆர் கோடுடன் கூடிய பால் இதுதான் மதுரை மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே முதல் முறை.
மேலும், மொபைல் செயலி மூலம் வீட்டுக்கு டெலிவரி செய்யக்கூடிய வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்வில், கண்மணி பால் நிறுவன அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.