டான்சிட்டியா சங்கம் சார்பில் 20.4.2023 தமிழ்நாடு முழுவதும் தொழில்துறையினர் மின் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து அன்றைய தினம் தொழில் கூடங்களை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் 18.04.2023 ல் குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் த.மு.அன்பரசு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டான்சிட்டியாவின் மாநில நிர்வாகிகளை அழைத்து கோரிக்கைகள் சம்பந்தமாக பரிசீலனை செய்தனர். மேலும் இது சம்பந்தமாக இன்று 19.04.2023 சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களிடம் எல்லாம் பேசி நோட்ஸ் இடப்பட்டு கோரிக்கையில் ஒன்று ஒன்றாக தீர்வு காண்பதாக உத்தரவாதம் கொடுத்து இருப்பதால் மேற்கண்ட போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் ஒத்தி வைப்பது என்று டான்சியா முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவை கோவையில் இருக்கின்ற 22 தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா 20.4.2023 நடக்கவிருந்த தொழில் கூடங்கள் அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை ஒத்தி வைப்பதாக தெரிவித்திருக்கிறது.