தமிழர் திருநாளை முன்னிட்டு மறுமலர்ச்சி திரவிட முன்னேற்றகழகம் சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், மதுரை ராஜா கடைதெருவில் தமிழர் திருநாளை முன்னிட்டு மறுமலர்ச்சி திராவிட கழக கொடியேற்று விழா நடைபெற்றது. நகரச் செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார்.
 நகர அவைத் தலைவர் சேது இன்பமணி,  நகர துணைச் செயலாளர் அக்பர் அலி ,லிங்கம் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விருதுநகர் மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி கொடியேற்றி, கட்சி தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில், விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், முன்னாள் ஒன்றியச்  செயலாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

scroll to top