தமிழக முதல்வர் பூரண நலம் பெற வேண்டி மதுரையில் சிறப்பு யாகம்

yagas-1-1518597647.jpg

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மேலும், அவர் பூரண குணம் பெற வேண்டும் என்று, மதுரை தத்தனேரி மெயின் ரோட்டில் உள்ள குருநாதர் ஜீவசமாதி தலைமை பீடாதிபதி தண்டபாணி சுவாமிகள் தலைமையில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்தினர்.
தொடர்ந்து, அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

scroll to top