தமிழக மாணவர்களின் பயணச்செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்: முதல்வர் தகவல்

images.jpeg-62.jpg

உக்ரைன் போர் சூழலில் சிக்கியுள்ள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்க அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் ஐந்து ஆயிரம் மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்களை மீட்கும் பொருட்டு மாவட்ட-மாநில அளவில் மற்றும் புதுடெல்லியில் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொண்டதாகவும், இன்று காலை 10 மணி வரை 916 மாணவர்களும் புலம் பெயர்ந்தோரும் தமிழக அரசை தொடர்பு கொண்டதாகவும் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

scroll to top