தமிழக மக்களை தலை நிமிரச் செய்த கலைஞர் பேனாவிற்கு சிலை வைப்பது பொருத்தமாக இருக்கும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம் பி பேட்டி

Pi7_Image_WhatsAppImage2022-09-07at06.49.19-e1662527510193.jpeg

பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் திட்டம் தள்ளிபோவது குறித்த கேள்விக்கு?
நிதிச் சுமையை காரணம் காட்டி முதல்வர் எந்தத் திட்டத்தையும் நிறுத்தவில்லை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளார்.
கலைஞரின் கையெழுத்தால் உருவான திட்டங்கள் ஒவ்வொரு முறையும் தமிழக மக்கள் தலை நிமிர்ந்துள்ளார்கள் அதனால் கலைஞர் நினைவிடம் அருகே பேனா சிலை வைப்பது பொருத்தமாக இருக்கும்.
சொந்த ஊருக்கு செல்ல மதுரை விமான நிலையம் வந்த தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி:
மதுரை விமான நிலையத்தில் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் பெண்களின் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு “புதுமைப் பெண்” திட்டத்திற்கான மாதந்தோறும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து உயர் கல்வியில் சேர விருப்பம் உடைய பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்கிற திட்டத்தை புதுமைப் பெண் திட்டம் என்ற பெயரில் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார் இந்த திட்டமானது ஏற்கனவே முதலமைச்சருடைய கனவு திட்டங்களில் மிகப் பிரதானமாக இந்த திட்டம் பெண்கள் கல்வி அறிவு பெற்றால் தான் அவருடைய வாழ்வு நிலை முன்னேறும் என்பதை கருத்தில் வைத்தே முதல்வர் பிற உதவித்தொகை பெற்றுக் கொண்டிருந்தாலும் அதோடு இணைந்து இந்த தொகை வழங்கப்படும் எனவும் இந்த தொகையானது அவர்களது உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவிற்கே முன்னோடியான திட்டமாக விளங்குவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நம் தாய்மார்களும் தங்களது பிள்ளைகளுக்கான கல்வி வளர்ச்சிக்கு இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முன் வர வேண்டும்.

கலைஞரின் ஆட்சி பள்ளி கல்வியில் ஒரு பொற்காலம் என்றால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி உயர்கல்வித்துறையில் ஒரு பொற்காலம் என தெரிவித்தார்.

பள்ளி கல்லூரிகளில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை உருவாவதாக குற்றச்சாட்டு வருகிறது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழச்சி தங்கபாண்டியன் இதை குற்றச்சாட்டாக கூற முடியாது ஆண் மாணவர்களும் பெண் மாணவர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது பொதுவெளியில் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைக்க பள்ளி கல்வித்துறை முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

சேலம் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு எட்டு வழி சாலை என்ற பிரச்சனை வேற எத்தனை பசுமையான இடங்களை காவு கொடுத்து உருவாக்கப்பட்டது என்பது நீங்கள் அறிவீர்கள் அதற்கும் இதற்கான ஒரு ஒத்த கருத்தை சரியாக வைக்க வேண்டும் மக்களுக்கான அரசு தான் இது ஆகவே மக்களுடைய கருத்துக்களை கேட்ட பின்பு தான் முதல்வர் அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்த கேள்விக்கு தெலுங்கானாவில் இந்த பிரச்சினை வந்தபோது கேஸ் சிலிண்டரில் மோடி படத்தை வைத்து அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்கள் மத்திய அரசிடம் இருந்து மானியம் வந்தாலும் நமக்கான முக்கியமான ஒரு வகையிலே அனைவருக்கும் அந்த அரிசி சென்று சேர்கிறதா என்பதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம் ஆகவே மத்திய அரசு ஒன்றிய அரசு மாநில அரசு என்ற எதுவும் இதில் கிடையாது ஆனால் அரிசிக்கு மானியம் கொடுத்தாலும் அனாவசியமான விலை ஏற்றம் உள்ளது சுங்கவரி மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இப்படி பல பிரச்சினைகளில் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு சந்திக்க இருப்பதால் நாம் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

நிதி நெருக்கடி நிலையில் கலைஞர் நினைவிடத்தில் பேனா சிலைசிலை அமைப்பதா?

பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் திட்டம் நிதி சுமையை காரணம் காட்டி தள்ளி வைத்த முதல்வர் கலைஞரின் பேனா சிற்பத்திற்கு 80 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் என பரவலாக குற்றச்சாட்டு வருகிறது என்பது குறித்த கேள்விக்கு நிதிச் சுமைக்காக அந்தத் திட்டத்தை முதல்வர் கைவிட வேண்டும் என சொல்லவில்லை இப்போது இல்லை அடுத்ததில் கொண்டு வருவோம் என்று சொல்லி இருப்பார்கள். நினைத்து பாருங்கள் கலைஞருடைய பேனா எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்றும் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என முதன் முதலில் கையெழுத்து போட்ட பேனா கலைஞரின் பேனா. அவர் பேனாவை தூக்கிய ஒவ்வொரு நிமிடங்களும் தமிழருடைய தலைவிதி நிமிர்த்திருக்கிறது அத்தனை கோடி கையெழுத்துக்களை போட்ட அந்த பேனாவை அவருடைய நினைவு சின்னமாக கொண்டு வருவது என்பது சால பொருத்தமாகும். எந்த காரண காட்டியும் எந்த திட்டத்தையும் நமது முதல்வர் கைவிடவில்லை தற்சமயம் அப்படி இருக்கிறது கூடிய விரைவில் அதை அமல்படுத்துவோம் என்பது முதல்வர் மக்கள் முன்பாக வைக்கிற கருத்து என தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார்.

scroll to top