தமிழக பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர் பதவி நிரப்ப வேண்டும்: தொல். திருமாவளவன்

தமிழகத்தில் உள்ள பல்கலை கழகங்களின் வேந்தாராக முதல்வர் வர வேண்டும்.
வரும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுப்பார்கள் என
வேளான் சட்டம் வாபஸ் எதிர்கட்சிகளின் தொடர் போரட்டத்திற்கு கிடைத்த வெற்றி பற்றி
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டியளித்தார்.

அவர் மேலும் கூறியது:
விவசாய குடிமக்களில் தொடர் போராட்டத்தின் விளைவாக மோடி அரசு பணிந்து இருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பல சட்டங்களை மோடி அரசு இயற்றி இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து உடைத்து யூனியன் பிரதேசமாக மாற்றிய சட்டம் என அடுக்கிக் கொண்டே போகலாம். மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டத்தால் அவர்களை சிதறடிக்க முடியாத நிலையில் எதிர்வரும் இருக்கிற 4 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு தடாலடியாக தலைகீழாக மோடி அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு பாரதிய ஜனதா உள்ளாகும் என்று கருதுகிறேன். இந்நிலையில், இந்திய ஒன்றிய அரசுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள். இந்த போராட்டத்தில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், 750 குடும்பங்களுக்கும் தலா மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க போவதாக அறிவித்திருக்கிறார்.
இறந்து போனவர்கள் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றாலும் கூட, விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க வேண்டும்வரவேற்கிறோம்.

ஆனால் ,இந்திய ஒன்றிய அரசு உயிரிழந்த அத்தனை குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு தலா ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும். விவசாயிகள் மீது புனையப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும், லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் விவசாயிகளின் மீது லாரியை ஓட்டி விவசாயிகளை படுகொலை செய்த அமைச்சர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அந்த அமைச்சரின் மீது அவருடைய மகன் நேரடியாக குற்றத்தில் ஈடுபட்ட வழக்கு பதிவாகி இருக்கும் நிலையில் அந்த அமைச்சரையும் அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான வகையில் குடியுரிமை திருத்த சட்டம் உள்பட சட்டங்களை எல்லாம் திரும்பப் பெற வேண்டும்.

ஆந்திர பிரதேசத்தின் முதல்வர், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சட்டப்பேரவையில் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் மிகக்கடுமையாக அநாகரிகமாக அரசியல் அரங்கில் வெட்கித் தலைகுனிய கூடிய வகையில் விமர்சித்து இருப்பது வெளியாகியிருக்கிறது. ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர் அழுத காட்சியை நாம் பார்த்தோம். இனி ஒரு முதல்வராக தான் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைப்பேன். அதுவரை, நான் சட்டமன்றத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன். என் குடும்பத்து பெண்களை எல்லாம் கொச்சைப் படுத்தினார்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அங்கே அநாகரிகமான விமர்சனங்கள் நடந்திருப்பது தனிநபர் விமர்சனங்கள் நடந்து இருப்பது கண்டனத்திற்குரியது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு பேசி அவர்களை உடனடியாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிக்கு காலியாக உள்ள கேள்விக்கு: தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ஆங்காங்கே காலியாகி வருகின்றன. அந்த பதவிகளில் பலர் நியமனம் செய்யப்படுகிறார்கள். மதுரை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது ஏன் என்று தெரியவில்லை.
விரைந்து, துணைவேந்தர் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் நீண்டகாலமாகவே பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளில் தலித் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சார்ந்தவர்கள் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

அண்மையில் கூட முதல்வர் அவர்களை சந்தித்தபோது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலை கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான துணைவேந்தரை நியமிக்ககிற போது, தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினரை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எல்லாம் ஆளுநரே தீர்மானிக்கிறார் என்ற ஒரு நிலை இருக்கிறது. சட்டத் திருத்தம் கொண்டு வந்து தமிழக முதல்வரே துணை வேந்தர்களை அறிவிக்க வேண்டும்.

பிற மாநிலங்களில் அத்தகைய நடைமுறை இருப்பதாக தெரிகிறது. ஆளுநராக இருக்கிற காரணத்தினால் தான் அவர் இந்த முடிவை மாநில அரசு பரிந்துரைத்தாலும் கூட, அதை புறந்தள்ளிவிட்டு மைய அரசுக்கு, ஒன்றிய அரசு ஏற்ற ஆட்களை ஆட்களை நியமிக்கும் போக்கு இருக்கிறது .

அவர்கள் இட ஒதுக்கீட்டை கவனத்தில் கொள்வதில்லை. விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இடதுசாரிகள் என அனைவரும் பங்கேற்று கூறவும் நானும் விடுதலைச்சிறுத்தைகளின் 800 நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார் நேரடியாக விவசாயிகள் போராடுகிற எல்லைப் பகுதிகளுக்கு சென்று அந்த போராட்டத்தில் கலந்து கொண்டோம். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம் கட்சி சார்பற்ற முறையில் எங்கள் போராட்டம் தொடர்கிறது. என்றாலும், உங்கள் வரவை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். என்று எங்களை வரவேற்றார்கள். மேடைகளில் அரசியல் கட்சி தலைவர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை என்பதை வெளிப்படையாக என்னிடம் கூறினார்கள்.

இதை நான் சொல்வதற்குக் காரணம் கட்சி சார்பற்ற முறையில் விவசாயிகள் போராடினார்கள் என்பது தான். பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் இடதுசாரி கட்சிகளும் பின்னணியில் இருந்து தூண்டி விட்டார்கள் என்று மோடி தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. பிரதமர் தரப்பிலிருந்து ஆனால், உண்மையில் அந்த போராட்டத்தில் இடதுசாரிகள் இடதுசாரி சிந்தனையாளர் பங்கேற்றவர்கள் என்றாலும் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் என்பதுதான் யதார்த்தமான உண்மை. எனவே, நாங்கள் ஆதரித்தாலும் ஆதரவாக போராட்டங்களில் பங்கேற்ற இந்த வெற்றிக்கு பஞ்சாப் ஹரியானா உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகளே உரிமை கோருவதற்கான தகுதியுள்ளவர்கள் அவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி அந்த போராளிகளுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

scroll to top