தமிழக ஊர்தி புறக்கணிப்பு; போடியில் ஆர்பாட்டம்

புதுடெல்லி குடியரசு நாள் விழா அணி வகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  குடியரசு நாளன்று போடியில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் போடி வ.உ.சி. சிலை திடலில் நடைபெற்றது. திராவிடர் கழக நகர செயலர் முருகானந்தன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ச.ரகுநாகநாதன், தி.மு.க. நகர செயலர் மா.வீ.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் கே.பெருமாள்,  காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.எம்.எஸ்.முசாக்மந்திரி உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்பாட்டத்தில் திராவிடர் கழகம், தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

scroll to top