தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏப்ரல் 1ம் தேதி ராஜபாளையம், சிவகாசிக்கு வருகை

WhatsApp-Image-2023-03-29-at-16.52.02.jpg

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் உள்ள கல்லூரிகளின் விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள இருக்கிறார்.

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் 50வது பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி மற்றும் சிவகாசி அய்யநாடார் – ஜானகியம்மாள் கல்லூரியின் 60ம் ஆண்டு தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகளில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக மார்ச் 31ம் தேதி இரவு, ராஜபாளையம் வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏப்ரல் 1ம் தேதி (சனிக்கிழமை) காலை திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து ராஜபாளையம் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மாலை 4 மணிக்கு சிவகாசி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

scroll to top