தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி

.jpg

காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு செய்திருந்ததாக கூறி, கோவை விமான நிலையம் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட செயலாளர் பத்பநாபன் தலைமையில் விமான நிலையம் முன்பு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதனையடுத்து போலீசார் போராட்டம் நடத்திய சுமார் 50 பேர் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென சாலையில் அமர்ந்து காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல் துறையினர் சாலையில் அமர்ந்த அனைவரையும் தூக்கி சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

scroll to top