தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா உள்துறைக்கு வரவில்லை: மத்தியஅரசு தகவல்

19-noneet.jpeg

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி கடந்த அதிமுக அரசு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், தமிழக ஆளுநர் அதை நிராகரித்து பிப்ரவரி 1ந்தேதி திருப்பி அனுப்பினார். இது தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக அரசு தமிழக சட்டப்பேரவையின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு புதிய நீட் விலக்கு மசோதா கொண்டு பிப்ரவரி 8ந்தேதி  நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. 2வது முறையாக மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பு சட்டப்படி, ஆளுநரால் மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது. இதற்கிடையில் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை உடனே குடியரசு தலைவர் அனுமதிக்கு அனுப்பி வைக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு முறை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் நீட் மசோதா தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள உள்துறை அமைச்சகம்,  தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரி தமிழக அரசால் இயற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசின்  பதில் தமிழக எம்.பி.க்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திர உள்ளது. பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, இதுவரை பரிசீலித்து முடிவெடுக்காத நிலையில், மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

scroll to top