தமிழகம் முழுவதும் நாளை குரூப் 2 தேர்வு

525709.jpg

தமிழ்நாடு அரசு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பதவிகள் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் இந்த தேர்வுகள் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது.

இந்த தேர்வை நாளை 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 6.82 லட்சம் பேர் பெண்கள் ஆவர். தமிழ் வழியில் படித்த 79, 000 பேரும் இந்த தேர்வை எழுத உள்ளனர். தேர்வில் பொது தமிழ் பிரிவை 9.47 லட்சம் பேரும், பொது ஆங்கில பிரிவை 2.31 லட்சம் பேரும் தேர்வு செய்துள்ளனர். 38 மாவட்டங்களில் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எந்தவித குளறுபடிகளும் இல்லாமல் குரூப்-2 தேர்வை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 300-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சுமார் 6,500 ஆய்வு குழுக்கள் நாளை களம் இறங்க உள்ளன.

scroll to top