தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சுப்பையன் ஆவின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

scroll to top