தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

images-53.jpeg

ளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

scroll to top