தமிழகத்தில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை

helicoptor-scaled.jpg

தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் இடையே பயணம் செய்வதற்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு உருவாக்கி வருகிறது.

தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஹெலிபேடுகள் பயன்படுத்தப் படாமல் இருக்கும் நிலையில் அதை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (டிட்கோ) இதற்கான பரிந்துரையை உருவாக்கி இருக்கிறது. தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கை மத்திய அரசின் ஹெலிகாப்டர் கொள்கை ஆகியவற்றை பயன்படுத்தி ஹெலிகாப்டர் சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தொலைதூர பகுதிகளுக்கு விரைவில் ஹெலிகாப்டர் சேவை வழங்கப்படும்.

scroll to top