சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாய், சேய் நல தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன், சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறியும் சிறப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
தமிழக சுகாதார சீரமைப்பு திட்டம் சார்பில் மாநில சுகாதார பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவிலேயே முதல்முறையாக சுகா தாரத்தை மேம்படுத்தும் வகையில் சுகாதார பேரவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், மாவட்ட வாரியாக சிறந்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.