தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி- பிரேமலதா

WhatsApp-Image-2023-05-23-at-22.13.58.jpg

மதுரை விமான நிலையத்தில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார்.
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் வழங்கி உள்ளனர்.
ஆனால், சித்திரை திருவிழாவில் உயிர் இழந்தவருக்கு இரண்டு லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்வியை ஆளுங்கட்சியிடம் கேட்க வேண்டும் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஆனால், இதுபோன்று கொலை சம்பவங்கள் நடைபெற்றது இல்லை..
தற்போது சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.. கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தஞ்சை மதுபான கடையில் மது அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர். இதில் சயனை கலந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது.
ஆவின் பால் நிறுவனம் மூலம் குறைந்த விலையில் தண்ணீர் வழங்குவதாக கூறுகிறார்கள்
முன்பு அம்மா குடிநீர் வழங்கிய திட்டமே செயல்படுத்த முடியவில்லை.

குடி தண்ணீருக்கு அனைவரும் வரி கட்டிக் கொண்டிருக்கிறோம் ஆனால் பல்வேறு இடங்களில் தற்போது வரை குடிநீர் வருவதில்லை..

அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டியது அரசின் கடமை..
முதல்வர் சிங்கபூர் பயணம் குறித்த கேள்விக்கு.
முதல்வர் கோடை காலம் என்பதால் சுற்றுலா சென்றுள்ளார். ஆனால் தொழில் முனைவோர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளேன் என கூறுகின்றனர்

ஆனால் இதற்கு முன்பு துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். என்ன தொழில் துவங்கப்பட்டது. எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது என்பது தெரியவில்லை..

தமிழ்நாட்டில் 1972-ல் முதல்முறையாக டாஸ்மாக் கொண்டு வந்தது கலைஞர் ஆட்சியில் தான்.. மதுக்கடைகளை ஒழிப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்றனர் ஆனால் செயல்படுத்துவதில்லை..

போதை இல்லாத தமிழக மாற்றுவது அரசின் கடமை.
அதிமுக பிளவு பட்ட நிலையில் தேமுதிக அரசியல் நிலை
கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். 41 மாவட்டங்களில் கட்சி உள்கட்சி தேர்தல் முடிந்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் மாநாடுகளும் நடத்த உள்ளோம். என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

scroll to top