தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவலுக்கான அறிகுறி இல்லை

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவலுக்கான அறிகுறி இல்லை என தமிழக சுகா தாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.
தமிழகத்தில் ஆறாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் மாநிலத்தில் மூன்றாம் அலை பரவல் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறியதாவது, “கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. மழை காலங்களில் பரவும் நோய்களில் இருந்தும் மக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள 1.40 கோடி முதியவர்களில் 47 லட்சம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 2-வது தவணை தடுப்பூசியை 22 லட்சம் முதியவர்கள் மட்டுமே போட்டுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. இதனி டையே, தமிழகத்திலும் மூன்றாம் அலை வரு வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என பலர் கேள்வி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை கொரோனா மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் இல்லை. என்றாலும் மூன்றாம் அலை வராது என்று கூற இயலாது. மக்கள் கவன முடன் இருக்க வேண்டும்.” என அவர் கூறினார்.

scroll to top