தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா..? முதல்வர் தலைமையில் ஆலோசனை

stalin.jpg

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 772 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 9 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர்.
இதனிடையே தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நவம்பர் 30 நிறைவடயவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய ‘ஒமிக்ரான்’ வகை கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

scroll to top