தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் விற்பனையை கட்டுபடுத்த வேண்டும் – தமுமுக

WhatsApp-Image-2021-10-11-at-5.39.54-AM.jpeg

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா . ஹெராயின், கூல் லிப் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதால், இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வருகின்றனர் என, மதுரையில் தமுமுக இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை வடக்கு மாவட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டத்தில் மாநில செயலாளர் அப்துல் காதர் மன்பயீ தெரிவித்தார்.

கூட்டத்தில், அவர் பேசியதாவது: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதே நிலை நீடித்து வந்தால் ,இன்னும் சில ஆண்டுகளில் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுவதோடு, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் இருந்து பின்தங்கி விடும்.

இளைஞர்கள் இது போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதால் கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் போதைப்பொருள் கடத்துவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என சட்டசபையில் தெரிவித்தார். கஞ்சா, ஹெராயின், கூல் லிப் போன்ற போதை பொருட்களை கடத்துவது யார்? விற்பனை செய்பவர்கள் யார்? அதற்கு மூல காரணமாக செயல்படுபவர் யார்? என்பதை கண்டறிந்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதோடு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதை பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இளைஞர்களை தடுக்க தமுமுக பிரச்சாரப் பேரவை செப்., 10 முதல் அக்., 30 வரை பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டம், துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்றார்.

வடக்கு மாவட்ட தலைவர் சீனி அகமது, செயலாளர் இப்னு , மனிதநேய மக்கள் கட்சி தலைவர் அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top