தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

gil.jpeg

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் கல்லாறு அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டு வரும் மலை ரயிலில் பல சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். 130 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த மலை ரயில் யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவது வழக்க மாக உள்ளது.இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சில தினங் களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு அருகே அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயில் கல்லாறு ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இத னால் அந்த ரயிலில் பய ணம் செய்த 180 சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம்ரயில் நிலையத்திற்கு இயக்கி வரப்பட்டது. ரயில் பாதையை சீரமைக்கும் பணியில்மலை ரயில் இருப் புப்பாதை முதன்மை பிரிவு பொறி யாளர் விவேக்குமார், மேட்டுப்பாளையம் மலை இரயில் இருப்பு பாதை பொறியாளர் கண்ணப்பன் ஆகியோர் மேற்பார்வையில் மேட்டுப்பாளையம், குன்னூர் ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஈடுபட்டனர். பாதையை சீரமைத்த பின்னர் மலை ரயில் மீண்டும் இயக்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

scroll to top