ட்ரெயின் டிக்கெட் வாங்க கூட தகுதி இல்லாத திமுக குடும்பத்தினருக்கு இத்தனை லட்சம் கோடி எப்படி வந்தது – பாஜக ஹெச்.ராஜா கேள்வி

WhatsApp-Image-2023-03-19-at-1.23.19-PM.jpeg

குஜராத்தில் நடைபெற உள்ள சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு, மதுரை ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயிலில் பயணம் செய்த பயணிகளை பாஜக மூத்த தலைவர் எச். ராஜா இனிப்புகள் வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில், செய்தியாளர்களை சந்தித்து ஹெச்.ராஜா பேசும்போது, பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலில் உள்ள 17 பேரும் அண்ணாமலை வெளியிட்ட சொத்துக்கள் எங்களுடைய சொத்துக்கள் அல்ல.அண்ணாமலை தெரிவித்ததற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவிக்க வேண்டியது தானே. இந்த சொத்துக்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை அனாவசியமாக அண்ணாமலை கூறி வருகிறார் என, திமுகவினர் நீதிமன்றம் செல்ல வேண்டியது தானே?

மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து நேரம் கொடுத்து இருக்கிறார். இன்னும் பத்து நாட்கள் கழித்து இது குறித்து அனைத்து சந்தேகங்களும் கேட்கலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை சொல்லியது ஊழல் பட்டியல் அல்ல சொத்து பட்டியல். அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியலில் தனியார் கம்பெனிகள், கல்லூரி நிறுவனங்கள் என எதுவும் எங்களுடையது அல்ல என, திமுகவினரும்,அந்த 17 பேரும் வாய் திறந்து இருக்கிறார்களா?

இவ்வளவு லட்சமகோடி பணம் எப்படி வந்தது. ட்ரெயின் டிக்கெட் வாங்க கூட தகுதி இல்லாத நபர் கலைஞர். கலைஞரின் குடும்பத்திற்கு இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் எப்படி வந்தது?

சினிமாவில், கலைஞர் கதை எழுதினால் எழுதியதற்கு மட்டும் தான் காசு. இவ்வளவு லட்சம் கோடிகள் சொத்துக்கள் எப்படி வந்தது. ஊழல் செய்ததால் வந்தது. ஏற்கனவே, திமுக அரசு
ஒரு கரும்புக்கு 13 ரூபாய் திருடிய அரசாங்கம் என்று நான் நிரூபித்து இருக்கிறேன். அந்த மாதிரி திருடி திருடி இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் வந்திருக்கிறது என்று பேசினார்.

மேலும், பேசிய அவர், அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கருத்துக்களுக்கு மட்டும் தான் பதில் சொல்லுவேன். வேறு யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன் என்று பேசினார். ஓபிஎஸ் மாநாடு குறித்த கேள்விக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

scroll to top