உலகின் முன்னணி குளோபல் தகவல் தொடர்பு மற்றும் அழைப்பாளர் ஐடி தளமான ட்ரூகாலர் (Truecaller), ஸ்வீடனுக்கு வெளியே, முதல் முதலாக இந்தியாவின் தென் பிராந்தியநகரமான பெங்களூருவில் தனது தனிப்பட்ட அலுவலகம் திறக்கப்படவிருப்பதை அறிவித்தது. இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் & மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரால் மெய்நிகர் நடைமுறையில் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
பெங்களூரு அலுவலகத்தின் துவக்கமானது ட்ரூ காலரின் இந்தியப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டில் முதல் முதலாக அடியெடுத்துவைத்த, ட்ரூகாலர் இன்று 338 மில்லியன் மாதாந்திர அடிப்படையிலான தீவிர பயனர்களோடு மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளது, அவர்களில் சுமார் 246 மில்லியன் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். வளர்ச்சி மற்றும் புதுமைகளை உருவாக்கும் ட்ரூ காலரின் செயல் திறன்களுக்கு முக்கிய மையமாக விளங்கும் இந்தியா, ட்ரூகாலர் தளத்தில் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் தொடங்குவதற்கும் தீர்வுகள் வழகுவதை மேம்படுத்த பின்னூட்டங்களை பெறுவதற்கும் தனித்துவமிக்க வாய்ப்புகளை வழங்குகிறது.
சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வசதியான சிறப்பியல்புகளை வழங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 30,443 சதுர அடிபரப்பளவில் நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகம் அமைந்துள்ளது மற்றும் 250 பணியாளர்கள் வரை பணிபுரியும் வசதி கொண்டது. முதல் முதலான அம்சங்களை இந்தியாவுக்கு வழங்கி , உலகளாவிய பயனர்களுக்கு சேவை செய்ய இந்த வசதியை அதன் முதன்மை மையமாகப் பயன்படுத்த ட்ரூ காலர் திட்டமிட்டுள்ளது. இந்த அலுவலகம் குறிப்பிடத்தகுந்த வகையில் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள ட்ரூ காலரின் தலைமையகத்திற்கு வெளியே அமைந்துள்ள ட்ரூ காலரின் மிகப்பெரிய தொழிலாகப் பிரிவாகும்.