டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கொரோனா

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளே உள்ளன. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த ஒரு சில நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதும், கொரோனா பரிசோதனை மேற்கொள்வதும் நல்லது என்றும் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. டெல்லியில் 4,099 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2021ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி பதிவான 4,482 தொற்று பாதிப்புக்குப் பிறகு பதிவாகும் அதிகபட்ச பாதிப்பாகும்.

scroll to top