டெல்லி கொரோனா பாதிப்பில் 84% பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

WhatsApp-Image-2022-01-03-at-18.12.15.jpeg

தலைநகர் டெல்லியில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 84% பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 1,700 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் மடடும் 351 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணத்தால், அங்கு பள்ளி கல்லூரிகள் அடைக்க முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், டில்லியில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 84% பேர் ஒமிக்ரான் வகை தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தொற்று உறுதியாகும் விகிதம் 6.5% ஆக அதிகரிக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது.

scroll to top